
குளுவாங், நவ 7 – வேலையில்லாத நபர் ஒருவர், ஒரு மாதம் மட்டுமே அறிமுகமான தனித்து வாழும் தாயான பெண்ணை காருக்குள் மானபங்கம் செய்ததன் தொடர்பில் போலீசார் கைது செய்தனர்.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் பாதிக்கப்பட்டவர் சந்தேக நபருடன் காரில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த செயல் இரண்டு தனித்தனி இடங்களில் நடந்ததாக நம்பப்படுகிறது.
சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்திப்பதற்கு முடிவு செய்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு சமூக ஊடகங்கள் மூலம் அவரை அறிந்திருந்தார் என்று குளுவாங் போலீஸ் தலைவர் துணை கமிஷனர் பஹ்ரின் முகமட் நோ (Bahrin Mohd Noh ) தெரிவித்தார்.
காரில் தனியாக இருந்த சூழ்நிலையை பயன்படுத்தி அந்த பெண்ணுக்கு எதிராக அந்த ஆடவன் இந்த செயலை புரிந்ததால் அன்றைய தினமே மாலை மணி 3.36 அளவில் பாதிக்கப்பட்டவர் புகார் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து கூலாயில் உள்ள வீட்டில் 49 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பஹ்ரின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.



