
கோலாலம்பூர், நவ 7 – பங்சாரில் உள்ள வாடகைக்கு எடுக்கப்பட்ட condominiumயத்தில் கஞ்சா செடிகளை வளர்த்ததாகக் கூறப்படும் ஒரு தம்பதியினர் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடமிருந்து போதைப் பொருள் மற்றும் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
கோலாலம்பூர் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை நேற்று இரவு 11.30 மணியளவில் நடத்திய சோதனையின் போது அந்த சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் இடைக்கால துணை கமிஷனர் ஏசிபி ஹூ சாங் ஹூக் ( Hoo Chang Hook) தெரிவித்தார்.
அவர்களிடமிருந்து கஞ்சா செடிகள் மற்றும் 1,210 ரிங்கிட் மதிப்புள்ள 27 கிரேம் காய்ந்த கஞ்சா இலைகள் ஆகியவையும் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்டது.
48 வயதுடைய ஆண் சந்தேகப் பேர்வழி ஒன்லைன் வீடியே வாயிலாக கஞ்சா செடிகளை பயிரிடும் உத்திகளை அறிந்துகொண்டதை ஒப்புக் கொண்டார்.
இந்த நடவடிக்கையின்போது அவரது 40 வயது காதலியும் கைது செய்யப்பட்டார். அவர்களிடமிருந்து இரண்டு கை தொலைபேசிகள் மற்றும் மூன்று necklacesகள், நான்கு pendantங்கள் மற்றும் இரண்டு மோதிரங்களையும் போலீசார் கைப்பற்றினர்.
வேலையில்லாத அந்த இருவரும் விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.



