Latestஉலகம்

டெல்லி விமான நிலையத்தில் ராடார் கோளாறு; நூற்றுக்கணக்கான விமானங்கள் தாமதம்

புது டெல்லி, நவம்பர்-8 – இந்தியாவின் புது டெல்லி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை, விமானக் கட்டுப்பாட்டு முறையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நூற்றுக்கணக்கான விமானங்கள் தாமதமாகின.

ராடார் கண்காணிப்பு செயலிழந்ததால், விமான இயக்கம் manual முறையில் நடத்தப்பட்டது.

இதனால் விமான நிலையத்தில் பெரும் குழப்பம் நிலவியது.

வேறு வழியின்றி சில விமானங்கள் அருகிலுள்ள நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

எனினும் மாலை வாக்கில் நிலைமை சரிசெய்யப்பட்டு விமானங்கள் பழையபடி இயங்கத் தொடங்கின.

எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!