Latestஅமெரிக்காஉலகம்

நீரிழிவு, உடல் பருமன் போன்ற உடல்நலக் குறைகள் அமெரிக்க விசா பெறுவதில் தடையாகலாம்

வாஷிங்டன், நவம்பர்-10,

அதிபர் டோனல்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் அடுத்த அதிரடியாக, அமெரிக்க விசா விதிகளில் புதியக் கட்டுப்பாடுகளை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய விதிகளின்படி, நாட்பட்ட நோய்கள் கொண்ட விண்ணப்பதாரர்கள் குறிப்பாக நீரிழிவு, உடல் பருமன் மற்றும் பிற உடல்நலக் குறைகள் உள்ளவர்கள் விசா பெறுவதில் தடைகள் ஏற்படலாம்.

இந்த நடவடிக்கை “Public Charge” என்ற கொள்கையின் கீழ், அரசாங்க உதவிகளை நாடக்கூடியவர்களைக் கணிக்க முயலும் ஒரு வழியாகும்.

அதாவது, உடல்நலக் குறைவு உள்ளவர்களால் அமெரிக்கவுக்கு நிதிச்சுமை ஏற்படலாம்; இந்நோய்களுக்கு சிகிச்சையளிக்க அதிக செலவாகும் என்பதால், விண்ணப்பதாரர்களின் உடல் ஆரோக்கியத்தை கட்டாயம் கவனத்தில் கொண்டே விசாவை ஏற்க வேண்டுமென தூதரகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், விமர்சகர்கள் இந்த உத்தேச விதிகள் பாகுபாடானவை என்றும், பல்வேறு நாடுகளிலிருந்து வரும் விண்ணப்பதாரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர்.

சட்ட நிபுணர்களோ, இந்த விதிகள் நீதிமன்றத்தில் சவாலுக்கு உள்ளாகலாம் என எச்சரிக்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!