Latest

வட்டி முதலைகள் அச்சுறுத்துவதாக போலீசில் பெண் புகார்

கோலாலம்பூர், நவ -10,

சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்ட உரிமம் பெறாத கடனில் சிக்கி, 100,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான கடனை எடுக்க வட்டி முதலையினால் கட்டாயப்படுத்தப்பட்டதால் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக பெண் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார். தொடக்கத்தில் 34 வயதான அந்த பெண் ஒரு முகவருடன் தொடர்பு கொண்டு 2,000 ரிங்கிட் கடனைப் பெற்றதாகவும் , ஆனால் 1,400 ரிங்கிட் மட்டுமே பெற்ற பின்னர் கடந்த ஜூலையில் ஏற்கனவே 2,000 ரிங்கிட்டை திருப்பிச் செலுத்தியிருந்ததாக பிரிக்பீல்ஸ்ட் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் ஹோ சாங் ஹோக் ( Hoo Chang Hook) தெரிவித்தார். அதன்பின் புதிதாக 4,000 ரிங்கிட் கடன் பெறுவதற்கான வாய்பை வாட்ஸ் மூலம் சலுகை கிடைத்தபோதிலும் அச்சுறுத்தப்பட்டதால் 2,100 ரிங்கிட் மட்டுமே கடன் பெற்றதாகவும் இந்த கடன் தொகைக்காக 1,500 ரிங்கிட் திரும்ப செலுத்திவிட்டபோதிலும் பாதிக்கப்பட்டவருக்கு தெரியாத எண்களிலிருந்து பல்வேறு கடன் சலுகைகள் தொடர்ந்து வந்தன.
பின்னர் முந்தைய கடன்களைத் தீர்க்க வட்டி முதலைகளிடம் 16 கடன்களை எடுத்துள்ளார்.

தாம் பெற்ற மொத்த கடன் தொகை 126,600 ரிங்கிட் என்றும் இதற்காக திரும்ப செலுத்த வேண்டிய தொகை 151,400 ரிங்கிட்டாக இருந்தும் சம்பந்தப்பட்ட வட்டி முதலைகள் இன்னும் கூடுதல் பணம் செலுத்தக் கோரி வருவதாகவும் , பணத்தை செலுத்தத் தவறியதற்காக அவர்கள் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாக அப்பெண் புகார் செய்துள்ளார். 1951 ஆம் ஆண்டின் கடன் வழங்கும் சட்டத்தின் 5 (2) விதியின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக Hoo Chang Hook தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!