Latestமலேசியா

இன்ஸ்பெக்டர் ஷீலா மீது விரைவில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டு கொண்டுவரப்படும் – கோலாலம்பூர் போலிஸ் தலைவர்

கோலாலம்பூர், நவ 11 – பாகிஸ்தானிய ஆடவரை சோதனை செய்தபோது போலீஸ் அதிகாரிகளின் நடவடிக்கைகளை கேள்வி எழுப்பியதற்காக வைரலான ‘Inspektor Sheila’ என்ற பெண் மீது விரைவில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு கொண்டுவரப்படும்.

சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு எதிரான விசாரணை முழுமையடைந்துள்ளதோடு அதன் அறிக்கை மேல் நடவடிக்கைக்காக அரசாங்க தரப்பு துணை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ பாடில் மர்சுஸ் ( Fadil Marsus) உறுதிப்படுத்தினார்.

கடந்த வாரம் ஜாலான் ஈப்போவில் இந்த சம்பவம் நடந்தது. உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய ஒரு வெளிநாட்டு நபரை கைது செய்த பின்னர், தனது கடமையைச் செய்து கொண்டிருந்த காவல்துறை அதிகாரியைத் தடுத்ததாகவும், அவமதித்ததாகவும் சம்பந்தப்பட்ட பெண் மீது குற்றம் சாட்டப்படவுள்ளது.

அரசு ஊழியரை தனது கடமைகளைச் செய்யவிடாமல் தடுத்ததற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 186 மற்றும் அவமதித்ததற்காக சிறு குற்றங்கள் சட்டத்தின் 14 ஆவது பிரிவின் இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்யப்பட்டது .

பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் மீதான Inspektor Sheilaவின் நடவடிக்கைகள் தொடர்பான சர்ச்சையைத் தூண்டிய பல சம்பவங்களைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு ஜூன் முதல் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!