
கோலாலம்பூர், நவ 11 – ஆசியாவில் சிறந்த செயல்திறன் கொண்ட நாணயமாக ரிங்கிட் இப்போது உருவெடுத்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.
இந்த மதிப்பீட்டை அரசாங்கம் மட்டும் செய்யவில்லை மாறாக
முன்னணி கடன் மதிப்பீட்டு நிறுவனத்தால் தீர்மாணிக்கப்பட்டதாக நிதியமைச்சருமான அன்வார் கூறியுள்ளார்.
முன்பு ரிங்கிட்டின் மதிப்பு வீழ்ச்சி கண்டபோது பலமுறை நமக்கு எதிரான சாடல்கள் அல்லது குறைகூறல்கள் கூறப்பட்டது. ஆனால் இப்போது ரிங்கிட் மதிப்பு வலுவாக இருக்கும்போது ஒரு வார்த்தைக்கூட எவரும் பாராட்டவில்லை.
இதுதான் இப்போதைய பிரச்னை என இன்று மக்களவையில் அன்வார் தெரிவித்தார். S&P குளோபல் ரேட்டிங்ஸ் மற்றும் Moody’s ரேட்டிங்ஸ் முறையே நாட்டின் இறையாண்மை கடன் மதிப்பீடுகளை A- மற்றும் A3 இல் பராமரித்தன, இது ஒரு நிலையான மற்றும் வலுவான எதிர்காலத்தைக் குறிக்கிறது.
நேற்று, அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 0.4 சதவீதம் உயர்ந்து 4.16 ஆக இருந்தது, இது கடந்த 13 மாத காலத்தில் மிகவும் உயர்வாகும், மேலும் இன்று அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 4.15 ஆக உயர்ந்தது. டாலரின் பலவீனத்தைத் தொடர்ந்து ரிங்கிட்டை தொடர்ந்து வாங்கும் ஆர்வம் காரணமாக இந்த வலுவடைந்தது.



