மலேசிய முதலாளியையும் மகனையும் பிலிப்பைன்ஸ் வேலைக்காரப் பெண் தாக்கினார்

குவந்தான், பிப் 11- இன்று காலை மணி 8.40 அளவில் குவாந்தனில் பிலிப்பைன்ஸ் வீட்டுப் வேலைக்காரப் பெண் ஒருவர் தனது பெண் முதலாளியையும், அவரது மகனையும் கத்தியால் தாக்கியதாகக் கூறப்படும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.
இந்த தகராறில் 57 வயது முதலாளியும் அவரது 28 வயது மகனும் காயமடைந்தனர் . கடுமையான தாக்குதலினால் முதலாளியின் மகனின் விரல் துண்டிக்கப்பட்டது. குவந்தானில் கோத்தா SAS Royal Town னிலுள்ள தரை வீட்டிற்குள் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்பட்டது.
இந்த தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன் அந்த வேலைக்காரப் பெண் கடுமையான நெருக்குதலுக்கு உள்ளானதாக தொடக்கக் கட்ட தகவல் மூலம் தெரியவருகிறது. இந்த தாக்குதலுக்குப் பின் அந்த வேலைக்காரப் பெண் கைது செய்யப்பட்டார்.
வீட்டினுள் இரத்த வெள்ளத்தில் ஆடவர் இருப்பதோடு அவ்வீடின் , தரை முழுவதும் இரத்தக் கறையுடன் இருக்கும் காணொளியையும் காணமுடிந்ததாக அண்டை வீட்டுக்காரர் ஒருவர் தெரிவித்தார்.



