Latestமலேசியா

ரொக்கமில்லா பொருளாதாரத்தை நோக்கி நகரும் மலேசியா; 5 சென் நாணயம் படிப்படியாக மீட்டுக் கொள்ளப்படலாம்

கோலாலம்பூர், நவம்பர்-12,

மலேசியா தொடர்ந்து
ரொக்கமில்லா பொருளாதாரத்தை நோக்கிச் செல்வதால், 5 சென் நாணயம் படிப்படியாக ஒழிக்கப்படலாம் என, பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

தற்போது, இது பெரும்பாலும் விலை தொகைகளைச் சுலபமாக சுற்றுப்படுத்த (round off) மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பாக விற்பனை மற்றும் சேவை வரியான SST போன்ற வரிகள் சேர்க்கப்படும் போது, மொத்தத் தொகை பூஜ்யம் முதல் 10 சென் வரை முடியும் நிலைகளில் இது பயன்படுகிறது.

e-Wallets மற்றும் இணையப் பரிவர்த்தனைகளின் வளர்ச்சியால் இந்த சிறிய மதிப்பு நாணயத்திற்கு ‘வேலையில்லாமல்’ போய் விட்டதாக, HELP பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Dr Chung Tin Fah கூறுகிறார்.

ஆனால், மின்னியல் கட்டண முறைகளுக்கு எல்லா மலேசியர்களும் இன்னும் பழக்கப்பட்டு விடவில்லை.

குறிப்பாக கிராமப்புறங்களில் ரொக்க புழக்கம் இன்னமும் முக்கியமானதாக இருப்பதால், இந்த நாணயத்தை ஒழிப்பது படிப்படியாகவே இருக்க வேண்டும் என்றார் அவர்.

வணிகர்களும் இதை ஒப்புக்கொள்கிறார்கள்; பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இப்போது ரொக்கமின்றியே கட்டணம் செலுத்துகிறார்கள்.

எனவே, ஒரு கட்டத்தில் இந்த நாணயத்தை ஒழிக்கவேண்டும் என்றே பலர் விரும்புகிறார்கள்.

ஆனால், கடந்த
ஆகஸ்ட் நிலவரப்படி 5.4 பில்லியன் 5 சென் நாணயங்கள் புழக்கத்தில் இருப்பதாக பேங்க் நெகாரா ஆச்சரியத் தகவலைக் கூறுகிறது.

என்னதான் டிஜிட்டல் கட்டண முறை பிரபலமடைந்து வந்தாலும், 2023 ஆண்டோடு ஒப்பிடுகையில் சந்தையில் நாணயப் புழக்கம் 5.5% அதிகரித்துள்ளதாக அந்த மத்திய வங்கி கூறிற்று.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!