Latest

2021 ஆம் ஆண்டு முதல் மை கார்டு தவறாக பயப்படுத்தியது தொடர்பில் 1,337 பேர் கைது

கோலாலம்பூர், நவ 12 – மை கார்டு மற்றும் பிறப்புத் பத்திரங்களை
தவறாக பயன்படுத்தியதன் தொடர்பில் 2021 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு அக்டோபர் 31 ஆம்தேதிவரை வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 1,337 பேர் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சர்
டத்தோஸ்ரீ சைபுடின் நசுட்டியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

1990 ஆம் ஆண்டின் தேசிய பதிவு விதிமுறைகளின் கீழ் மை கார்டை 338 பேர் தவறாக பயன்படுத்தியதாக நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தபோது அவர் இத்தகவலை
வெளியிட்டார்.

இவற்றில் 232 போலி மை கார்டுகள் மற்றும் மற்றவர்களின் மை கார்டை பயன்படுத்திய 106 சம்பவங்களும் அடங்கும். இந்த குற்றம் புரிந்தவர்களில் 172 பேர் பிலிப்பினோக்கள், 132 பேர் இந்தோனேசியர்கள் மற்றும 34 பேர் இதர நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளாவர்.

இது தொடர்பான சில வழக்குகள் இன்னும் நடைபெற்று வருவதோடு , சிலருக்கு நடப்பு சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டது.

1990 ஆம் ஆண்டு முதல் தேசிய பதிவு விதிமுறைகளின் கீழ் 843 குற்றச்சாட்டுகள் பதிவாகியிருப்பதையும் சைபுடின் சுட்டிக்காட்டினார். பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்போடு இந்த காலக் கட்டத்தில் 3,418 அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!