
ஈப்போ, நவம்பர் 15 – தாமான் பெர்பாடூவான் ரியா, உலு கிந்தா (Taman Perpaduan Ria, Ulu Kinta) பகுதியி நேற்று ஏற்பட்ட தீ விபத்தில், 80 வயதான வயோதிகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றவுடனேயே சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்துச் சென்றபோதும் தீ விபத்து ஏற்பட்ட வீடு சுமார் 80 விழுக்காடு வரை எரிந்து சேதமடைந்திருந்தது.
தீயணைப்பு பணிகள் முடிந்த பின்னர், வீட்டின் இரண்டாவது படுக்கையறையின் தரையில் முதியவரின் எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டது.
மேலும் இவ்விபத்தில், அருகாமையிலுள்ள வீடுகள், 2 கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகிய அனைத்தும் சேதமடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது..
உயிரிழந்தவரின் உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த தீ விபத்து ஏற்பட்டதிற்கான காரணங்களும் மொத்த சேதங்களின் மதிப்பும் இன்னும் விசாரணையில் உள்ளதென்று தெரிவிக்கப்பட்டது.



