
லண்டன், நவம்பர்-16 – பிரிட்டன் பட்டத்து இளவரசர் வில்லியம் தனது குடும்பத்துடன் ‘என்றும் வாழும் இல்லம்’ என்ற பெயரிலான Forest Lodge வீட்டுக்கு குடியேறிய சில நாட்களிலேயே, அவரின் துணைவியார் கேட் மிடல்டன் இலையுதிர் பருவ வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அவரின் தீவிர இரசிகர்கள் அதனை ஆச்சரியத்தில் வரவேற்றுள்ளனர்.
Kensington அரண்மனை உருவாக்கிய Mother Nature தொடரின் ஒரு பகுதியாக வெளிவந்த இந்த வீடியோவில், கேட் இந்த இலையுதிர் பருவத்தை “சிந்தனை, வளர்ச்சி, ஆழமான இணைப்பு” என விவரித்தார்.
“மாற்றத்தின் அழகை ஏற்றுக்கொள்ளுங்கள்” என அவர் கூறுவதும் முக்கியத்துவம் பெறுகிறது.
ஒருவேளை அரண்மனையுடனான உறவைப் பற்றித்தான் அவர் அப்படி சூசகமாக சொல்கிறாரோ என சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.
வீடியோவில், சமையல்காரர் Gill Meller-ருடன் வெளிப்புறத்தில் சமையல் செய்யும் காட்சிகள், லூட்டனில் உள்ள Farley Junior Academy மாணவர்களுடன் தீ மூட்டலைச் சுற்றி அமர்ந்து உரையாடுவதும் இடம்பெறுகின்றன.
வட அயர்லாந்தின் Long Meadow Cider மற்றும் Mallon Farm ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது.
பிரிட்டன் அரச குடும்பத்தைச் சுற்றியுள்ள அண்மைய சிக்கல்களுக்கு மத்தியில், புற்றுநோயிலிருந்து மீண்டு வரும் கேட்டின் அமைதியான செய்தி இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
2 ஆண்டுகள் Adelaide Cottage-ல் வசித்த பின், வில்லியம்–கேட் குடும்பம் தற்போது Forest Lodge-ஜில் நிரந்தரமாக குடியேறியுள்ளனர்.



