Latestமலேசியா

இந்திரா காந்தி பேரணியில் இணைகிறது ம.இ.கா

ஷா அலாம், நவ 16 – நவம்பர் 22 ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்திரா காந்தி பேரணிக்கு ஆதரவு தெரிவித்து ம.இ.கா அந்த பேரணியில் கலந்துகொள்ளும்.

தனது முன்னாள் கணவர் முகமட் ரிடுவான் அப்துல்லாவினால் (Muhammad Riduan Abdullah ) கடத்திச் செல்லப்பட்ட மகள் பிரசன்னா டிக்சாவை (Prasana Diksa) கண்டுபிடித்து கொடுக்கும்படி போலீசிற்கு நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் 14 ஆண்டு காலமாக தனது மகள் கிடைக்காமல் இந்திரா காந்தி பெரும் வேதனையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் சோகோ (SOGO) வர்த்தக மையத்திலிருந்து புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம்வரை Justice March என்ற பேரணியை இந்திரா காந்தி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார்.

அந்த பேரணியில் இந்திரா காந்திக்கு ஆதரவாக ம.இ.காவும் பங்கேற்கும் என ஷா அலாமில் நடைபெற்ற ம.இ.கா தேசிய பேராளர் மாநாட்டில் ஆற்றிய கொள்கையுரையின்போது விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!