
செலாயாங், நவம்பர் 18-சிலாங்கூர் பண்டார் உத்தாரா செலாயாங்கில் அரசு சாரா இயக்கத்தைச் சேர்ந்த ஆர்வலர்கள் குழுவைத் தடுத்த ஒருவரை, போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, 38 வயதான சந்தேக நபர் நேற்று காலை கைதுச் செய்யப்பட்டதாக செந்தூல் போலீஸ் கூறியது.
அவ்வாடவர் ஏற்கனவே 4 குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ளார்; அவற்றில் 3 போதைப்பொருள் தொடர்பானவையாகும்.
குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்க ஏதுவாக அவரைத் தடுத்து வைக்க நீதிமன்ற அனுமதிப் பெறப்படுமென போலீஸ் தெரிவித்தது.
அச்சம்பவத்தின் வீடியோ முன்னதாக சமூக ஊடகங்களில் வைரலானது.
அதில் சந்தேக நபர் ஆபாச வார்த்தைகளை பேசுவதும், தன்னார்வலர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதும் தெரிந்தது.
வெளிநாட்டினர் அந்தப் பகுதியில் வணிகம் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடை குறித்து தன்னார்வலர்கள் விளக்கிய போது அச்சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.



