சட்டவிரோத குடியேறிகளுக்கு வீடுகளை வாடகைக்கு விடாதீர் – குடிநுழைவுத்துறை எச்சரிக்கை

கிள்ளான், நவ 18 – உள்நாட்டைச் சேர்ந்த வீட்டின் உரிமையாளர்கள்
தங்களது வீடுகளை சட்டவிரோத வெளிநாட்டு குடியேறிகளுக்கு வாடகைக்கு விடக்கூடாது என குடிநுழைவுத்துறை கடுமையாக எச்சரித்துள்ளது .
சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டால்
அவர்கள் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குடிநுழைவுத்துறையின் நடவடிக்கைக்கான துணை இயக்குநர் டத்தோ லொக்மான் எப்பெண்டி ரம்லி தெரிவித்தார்.
வெளிநாட்டினர் மட்டுமின்றி , சட்டவிரோ வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தும் மற்றும் அவர்களை பாதுகாக்கும் உள்ளூர்வாசிகளும் சட்ட நடவடிக்கையிலிருந்து தப்ப முடியாது. சட்டவிரோத குடியேறிகளுக்கு வாடகை வழங்கிய வீட்டின் உரிமையாளர்கள் மீதும் குற்றஞ்சாட்டப்படும் .
இது சட்டவிதியாக இருப்பதால் எவரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என போர்ட் கிளாங்கில் உள்ள பங்சாபுரி பெண்டாமரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் லொக்மான் தெரிவித்தார்.
இதனிடையே போர்ட் கிள்ளான் Pendamar அடுக்ககத்தின் 9 மாடிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 286 வெளிநாட்டினர் பரிசோதிக்கப்பட்டதோடு பல்வேறு குற்றங்களுக்காக சட்டவிரோத குடியேறிகளில் 95 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 18 முதல் 50 வயதுடைய 70 ஆடவர்கள் மற்றும் 25 பெண்களும் அடங்குவர்.



