Latestமலேசியா

ஐரோப்பாவுக்கான AirAsia X-சின் புதிய நீண்ட தூரப் பயண திட்டம்

கோலாலாம்பூர், நவம்பர் 18- மலேசியாவின் மலிவுக் கட்டண விமான நிறுவனமான AirAsia X, அடுத்தாண்டு ஐரோப்பாவுக்கு புதிய நீண்ட தூரப் பயணங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

அந்நிறுவனம் கடந்த நவம்பர் 14 தேதி தான் கோலாலாம்பூரிலிருந்து துருக்கியேவின் இஸ்தான்புலுக்கு நேரடி விமான சேவையைத் தொடங்கியது.

அம்மாநகரங்களுக்கு இடையில், ஆண்டுக்கு 150,000 இருக்கைகளுடன் தற்போது வாரத்திற்கு 4 விமானங்கள் இயக்கப்படுகின்றன; விரைவில் அதனை தினசரி சேவையாக உயர்த்தும் திட்டமும் உள்ளதாக அதன் தலைமை செயலதிகாரி Benyamin Ismail கூறினார்.

இந்த விரிவாக்கம், கோவிட்-10 பெருந்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பிறகு AirAsia X ஐரோப்பாவுக்கு மீண்டும் திரும்பும் முக்கியமான படியாகும்.

இஸ்தான்புல் வழியாக ஆசியாவை ஐரோப்பாவுடன் இணைக்க Air Asia X விரும்புவதாகக் குறிப்பிட்ட இஸ்மாயில், இனி ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு நகரங்களுக்கு சேவையை விரிப்படுத்த இலக்கு கொண்டிருப்பதாக சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!