Latestமலேசியா

பஞ்சரான டயரை மாற்றியபோது லோரி மோதியது பெண் மரணம்

சிரம்பான், நவ 19 – வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் 260.6ஆவது
கிலோமீட்டரில் பஞ்சரான தனது SUV வாகனத்தின் பின் டயரை மாற்றிக்கொண்டிருந்த பெண் ஓட்டுநரை ர் லோரி மோதியதில் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே அவர் மரணம் அடைந்தார்.

இன்று காலை மணி 9. 20 அளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் செனவாங்கில் தாம் வேலை செய்யும் நீர் சுத்தகரிப்பு நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்தபோது நிகழ்ந்த விபத்தில் 31 வயது பெண் இறந்தார்.

இன்று காலையில் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டிய அப்பெண் வரத்தவறியால் அவருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த மற்றொரு தோழியை தொலைபேசி மூலம் அழைத்து விசாரித்தபோதுதான் இந்த துயரச் சம்பவத்தை அறிந்ததாக அவருடன் ஒன்றாக வேலை செய்துவரும் நுர் அபிக்கா ஜம்ரான் என்பவர் தெரிவித்தார்.

உடனடியாக விபத்து நிகழ்ந்த இடத்திற்கு சக ஊழியருடன் சென்று பார்த்தபோது இறந்த அவரது உடல் வெள்ளை துணியால் மூடப்பட்டிருந்ததாக நுர் அபிக்கா வேதனையோடு கூறினார்.

இதனிடையே இதனிடையே இந்த விபத்தில் புரோட்டான் எக்ஸ்50 SUV வாகனம் மற்றும் VOLVO ஸ்போர்ட்ஸ் கொள்கலன் லாரி ஆகியவை சம்பந்தப்பட்தாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் அசஹர் அப்துல் ரஹ்மான் ( Azhar Abdul Rahman ) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!