
கிள்ளான், நவ 19 – கேரித் தீவு சுங்கை திங்கி தோட்ட முன்னாள்
குடியிருப்பாளர்களின் ஒன்றுகூடும் நிகழ்வு அண்மையில் பந்திங், தெலுக் பங்லீமா காராங் சமூக மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
சுற்று வட்டார பிரமுகர்களுடன் கோலா லங்காட் நகராண்மை கழக உறுப்பினர் கே.பன்னீர்செல்வம் , நட்புக்காக சங்கத் தலைவர் டாக்டர் ராமச்சந்திரன் சமூகச் சேவையாளர் டத்தோ வெள்ளையப்பன் , டாக்டர் செல்வேந்திரன் , திரு.ரவீந்திரன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு வருகையாளர்களாக கலந்துகொண்டனர்.
நாட்டின் பிரபல கலைஞர்களில் ஒருவரான எம்ஜிஆர் சேகர், டி.எம்.எஸ் புகழ் அக்னி கனகா ஆகியோர் அருமையான பாடல்களை பாடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை மகிழ்வித்தனர்.
நட்புக்காக சங்கமம் அமைப்பின் உதவியுடன் தோட்ட முன்னாள் குடியிருப்பாளர்கள் தங்களது இனிமையான பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமைந்த இந்த நிகழ்சியில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளும் செய்யப்படுவதாக ஏற்பாட்டாளர்களில் ஒருவரான பொன்.பெருமாள் கூறினார்.



