Latestமலேசியா

கைப்பேசிக்கு அழைப்பு வந்ததும் மௌனமா? எச்சரிக்கையாக இருங்கள்.. உங்கள் தகவல் திருடப்படலாம்

கோலாலம்பூர், நவம்பர்-20 – உங்கள் கைப்பேசிக்கு திடீரென அறிமுகமில்லாத ஓர் எண்ணிலிருந்து அழைப்பு வருகிறது… ஆனால் எதிர்முனையில் ஒரே மௌனம்…இது நமக்கு சாதாரணமாக தோன்றலாம்.

ஆனால் இது ஒரு மோசடிக்கான தொடக்கமாக இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

“மௌன அழைப்புகள்” எனப்படும் இப்புதிய மோசடி முறையைப் பற்றி அதிகாரிகள் மக்களை எச்சரிக்கின்றனர்.

இந்த அழைப்புகள் பெரும்பாலும் வெளிநாட்டு எண்கள் அல்லது நீளமான எண்ணிலிருந்து வரும்.

அழைப்பாளர் பேசாமல் இருப்பார், ஆனால் பின்னணி ஒலிகளை பதிவுச் செய்வதற்கும், அடுத்து வரும் குறுஞ்செய்தி மோசடிக்கான ‘பாதையாகவும்’ இது பயன்படலாம்.

எனவே இதுபோன்ற மௌன அழைப்புகளைப் பெறும் போது உடனே அவற்றை நிறுத்தி விடுங்கள்.

எக்காரணம் கொண்டும் தனிப்பட்ட தகவல்களை பகிராதீர்கள்.

Truecaller, Whoscall போன்ற செயலிகளை பயன்படுத்தி எண்களை block செய்து விடுங்கள்.

சந்தேகத்திற்கிடமான எண்கள் குறித்து உடனடியாக அதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள்.

“மோசடிகள் வளருகின்றன. எனவே நம்முடைய விழிப்புணர்வும் வளர வேண்டும்” என்கிறார் CyberSecurity Malaysia வின் தலைமை நிர்வாக அதிகாரி Datuk Dr Amirudin Abdul Wahab.

எந்நேரமும் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள்…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!