
பாலிங், நவ 21 – இன்று காலை பாலிங்கில் உள்ள ஒரு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தினால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
இரண்டு மாடி கட்டிடத் தொகுதியின் கூரையில் தீ மற்றும் அடர்ந்த புகை நிரம்பியதைக் காண முடிந்தது. பாலிங் தேசிய தொடக்கப் பள்ளி ஒரு வைரல் வீடியோ மூலம், பாலிங் தேசிய பள்ளி தீ விபத்திற்குள்ளானதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்ததை வைரலான வீடியோவில் காணமுடிந்தது.
தீயணைக்கும் நடவடிக்கை தற்போது நடைபெற்றுவருகிறது. எனினும் இச்சம்பவத்தில் எவரும் காயம் அடைந்தது குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இம்மாநிலத்தில் வார இறுதி விடுமுறை இன்று தொடங்கிய நாளில் இச்சம்பவம் நடந்துள்ளது.



