
ஷா அலாம், நவ 25- நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியின் பராமரிப்பில் இருந்த ஒன்பது மாத ஆண் குழந்தையை ஓரின புணர்ச்சி செய்தபின் அக்குழந்தையை கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட வேலையில்லாத ஆடவனுக்கு ஷா ஆலம் உயர் நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 13 பிரம்படிகளை விதித்தது.
குற்றவாளியான 40 வயதுடைய முகமட் பட்ருடின் முகமட்
( Mohamed Badrudin Mohamed) ஓரினச்சேர்க்கை வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஒரு பிரம்படியும், கொலை வழக்கில் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 12 பிரம்படிகளையும் அனுபவிக்கும்படி ஷா அலாம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கைது செய்யப்பட்ட 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதியிலிருந்து ஏகாகாலத்தில் இந்த தண்டனைகளை அனுபவிக்க வேண்டுமென நீதிபதி தீர்ப்பளித்தார்.
விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவரின் மரபணு மற்றும் விந்து கொல்லப்பட்ட குழந்தையின் ஆசனவாயில் காணப்பட்டது.
அதோடு, ஒரு மழுங்கிய ஆயுதத்தால் ஏற்படுத்தப்பட்ட காயங்களும் மர்ம உறுப்பில் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த கொடுமையினால் அக்குழந்தை சுவாசிக்க முடியாமல் உயிரிழந்தது சவப் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
தண்டனைச் சட்டத்தின் 302 ஆவது விதியின் கீழ் கொலைக் குற்றச்சாட்டும், 377 C விதியின் கீழ் ஓரின புணர்ச்சி குற்றச்சாட்டும் அந்த ஆடவன் மீது கொண்டுவரப்பட்டது.
பாதிக்கப்பட்ட குழந்தையின் வயது மற்றும் அந்த குழந்தைக்கு எதிராக அந்த காமுகனின் கொடூரமான நடவடிக்கையை கருத்திற்கொண்டு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என அரசு தரப்பு நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டது.



