
ஹுலு சிலாங்கூர், டிசம்பர்-1 – சிலாங்கூரில், ஒரு லாரி டிரைவர் போலீஸிலிருந்து தப்பிக்க முயன்று 150 கிலோ மீட்டர் தூரம் வரை எதிர்திசையில் அதிவேகமாக ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று காலை 5.35 மணிக்கு தொடங்கிய துரத்தலில், போலீஸ் எச்சரித்தும் அவர் நிற்காமல், PLUS நெடுஞ்சாலையின் பல இடங்களில் எதிர் திசையில் கண்மூடித்தனமாக ஓடி, ஒரு கணத்தில் பல வாகனங்களை ஆபத்தில் ஆழ்த்தினார்.
தப்பிச் செல்லும் போது, லாரி ஓட்டுநர் ஒரு போலீஸ் வாகனத்தை மோத முயற்சித்ததும் உறுதிச் செய்யப்பட்டது.
விடாமல் துரத்திச் சென்ற 3 போலீஸ் ரோந்து வாகனங்கள், பின்னர் ஒருவழியாக புக்கிட் பெருந்தோங், தாமான் பூங்கா ராஜா பகுதியில் லாரியை மறித்து அவ்வாடவரைக் கைதுச் செய்தன.
சிறுநீர் பரிசோதனையில், அந்த ஓட்டுநர் methamphetamine போதைப்பொருளைப் பயன்படுத்தியது உறுதியானது.
அவருக்கு 2 பழையக் குற்றப்பதிவுகள் உள்ளதும் கண்டறியப்பட்டது.



