
கோலாலம்பூர், டிசம்பர் 1 – கோலாலம்பூர், கம்போங் சுங்கை பாருவில் நடைபெற்ற மண் உரிமை நிகழ்வின்போது கலகத்தை ஏற்படுத்த முயன்றதாக சந்தேகிக்கப்பட்ட நடிகை மற்றும் சமூக செயற்பாட்டாளர் ரஃபிடா இப்ராஹிம் உட்பட நால்வர் கைது செய்யப்பட்ட பின்னர் போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
பொது அமைதி பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்ற விசாரணை சட்டத்தின் கீழ் அவர்களைக் கைது செய்ததாக கோலாலம்பூர் போலீஸ் துறை தலைவர் டத்தோ Fadil Marsus தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைப்புகளின் அடிப்படையில், நிகழ்வின் போது குழப்பம் ஏற்படும் வாய்ப்பு இருந்ததால் அந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
தற்போது நான்கு பேரும் விடுவிக்கப்பட்டிருந்தாலும், விசாரணை மேலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றதென்று போலீஸ் தரப்பு கூறியுள்ளது.



