
கோயம்புத்தூர், டிசம்பர் 2 – கோயம்புத்தூரில் மனைவியைக் கொன்று அவரின் சடலத்துடன் ‘செல்பி’ எடுத்து ‘Whatsapp Status’-இல் பதிவிட்ட கணவரின் செயல் உண்மையிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்த அந்த ஆடவர் தனது மனைவிக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாகக் சந்தேகித்து அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த ஞாயிறன்று, அந்நபர் தனது மனைவியைத் தங்கும் விடுதியிலிருந்து வீட்டிற்கு திரும்பச் செல்ல அழைத்திருக்கின்றார். மனைவி வர மறுத்ததால் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அரிவாளால் பலமுறை வெட்டிக் கொலை செய்துள்ளார்.
கொலை செய்த பின்பு, அங்கிருந்து தப்பிச் செல்லாமல் உடலின் அருகே அமர்ந்து செல்பி எடுத்து, “வஞ்சகத்தின் விலை மரணம்” என்று எழுதி Whatsapp Status-இல் பதிவிட்டுள்ளார்.
சமூகத்தை உலுக்கிய அச்சம்பவம் தொடர்பான மேல் விசாரணையைப் போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.



