
ஜோர்ஜ்டவுன், டிசம்பர்-8 – இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான IndiGo, உள்நாட்டு விமானங்களில் பாதியை இரத்துச் செய்துள்ள நிலையில், சென்னையிலிருந்து பினாங்குக்கான அதன் நேரடி விமான சேவை பாதிக்கப்படவில்லை என உறுதியளித்துள்ளது.
நேற்று காலை கூட
சென்னை – பினாங்கு இடையிலான நேரடி விமானம் காலை 8.09 மணிக்கு வழக்கம்போல தரையிறங்கியது என்றும், கடந்த சில நாட்களாக சேவை சீராக நடைபெற்று வருவதாகவும் பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் Wong Hon Wai தெரிவித்தார்.
IndiGo, சென்னை-பினாங்கு இடையிலான நேரடி சேவையை கடந்தாண்டு டிசம்பர் 21-ஆம் தேதி தொடங்கியது.
அந்நிறுவனம் கோலாலம்பூர் மற்றும் லங்காவிக்கும் விமான சேவைகளை வழங்குகிறது.
பணியாளர்களுக்கு கூடுதல் ஓய்வு நேரம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் புதிய விமானப் பணியாளர் விதிகள் காரணமாகவே இந்தியாவில் IndiGo விமானங்களின் இரத்து ஏற்பட்டுள்ளது.
விமானிகளுக்கு நிலவும் பற்றாக்குறையை அப்புதிய விதிமுறை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அரசாங்கம், IndiGo நிறுவனத்தின் நிர்வாக குறைபாடுகள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.



