
தைப்பிங் , டிச 8 – தைப்பிங்கிற்கு அருகே Tekah விமான நிலையத்தில் சிறுரக விமானம் ஒன்று விபத்திற்குள்ளானதில் விமானியும் , பயிற்சியாளரும் காயம் அடைந்தனர்.
இயந்திரம் செயல் இழந்ததைத் தொடர்ந்து அந்த விமானம் அவசரமாக தரையிறங்கியபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தைப்பிங் மாவட்ட
போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Mohamad Nasir Ismail வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
46 வயதுடைய விமானியும் 40 வயதுடைய பயிற்சியாளரும் சிகிச்சைக்காக தைப்பிங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும் அவர்கள் நிலைமை சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
நேற்று காலை மணி 10.30 அளவில் நிகழ்ந்த அந்த விபத்தில் விமானியான ஆடவர் ஓட்டிச் சென்ற Microlight சிறு ரக விமானத்தில் மற்றொரு பயிற்சியாளரான ஆடவர் இருந்ததாக முகமட் நஷிர் தெரிவித்தார்.



