
கோலாலம்பூர், டிசம்பர்-10 – தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த ஊடகங்களின் பங்கு மிக முக்கியம் என தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டாகாங் வலியுறுத்தியுள்ளார்.
“ஒற்றுமை குறித்த வலுவான செய்திகள், ஊடகங்களின் நெருக்கமான ஒத்துழைப்பு இல்லாமல் சாத்தியமில்லை” எனக் கூறிய அமைச்சர், அரசாங்கத்தின் முயற்சிகள் அனைத்தும் மக்களிடம் சென்றடைவது பத்திரிகைகள், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்கள் வழி மட்டுமே என்றார்.
“கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஊடகங்கள் புரிதலை ஒருங்கிணைக்கும் முக்கிய பாலமாக செயல்படுகின்றன. இதுவே சமூகத்தின் நிலைத்தன்மை மற்றும் ஒற்றுமைக்கு அடிப்படை” என அகோ புகழாரம் சூட்டினார்.
கோலாலம்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஊடகப் பணியாளர்களுடன் நடத்திய சந்திப்பில் அமைச்சர் அவ்வாறு பேசினார்.
துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி உள்ளிட்ட பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் என சுமார் 200 பேர் அதில் பங்கேற்றனர்.



