சபாவை 5-0 என தோற்கடித்து FA கிண்ணத்தைத் தற்காத்துக் கொண்ட JDT; ஜோகூரில் இன்று சிறப்பு விடுமுறை

புக்கிட் ஜாலில், டிசம்பர்-15 – மலேசிய FA கிண்ணத்தை தொடர்ந்து நான்காவது முறையாக வாகைச் சூடி, JDT வரலாறு படைத்துள்ளது.
புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் நேற்றிரவு நடைபெற்ற இறுதியாட்டத்தில் Sabah FC அணியை, JDT மிக எளிதாக 5-0 என தோற்கடித்தது.
ஆட்டம் தொடங்கியது முதலே JDT-யின் கையே ஓங்கியிருந்த நிலையில், Jonathan Silva, Jairo da Silva, Oscar Aribas மற்றும் Manuel Hidalgo ஆகியோர் அவ்வணிக்கான கோல்களைப் புகுத்தினர்.
JDT-யின் அதிரடித் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் Sabah FC திணறியது.
இதே கடந்தாண்டு இறுதியாட்டத்தில் Selangor FC அணியை JDT 6-1 என படுதோல்வி அடையச் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மகத்தான வெற்றியைக் கொண்டாடும் வகையில், இன்று டிசம்பர் 15-ஆம் தேதி ஜோகூரில் சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு மக்கோத்தா இஸ்மாயில் அவர்களின் ஆணைக்கிணங்க, அவ்விடுமுறை வழங்கப்படுவதாக, இறுதியாட்டத்திற்குப் பிறகு மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் கா’சி (Onn Hafiz Ghazi) அறிவித்தார்.



