
சிரம்பான், டிச 15 – சிரம்பான் லோபாக் தமிழ்ப் பள்ளியின் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா முதல் முறையாக மலேசிய அறிவியல் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த சிறப்புமிக்க விழாவில் நாட்டின் உச்ச நீதிமன்றமாக திகழும் கூட்டரசு நீதிமன்றத்தின் நீதிபதியான டான்ஸ்ரீ நளினி பத்மநாதன் கலந்துகொண்டு விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைத்தார்.
அவரது உரை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் ஊக்கமாகவும் எழுச்சியூட்டும் வகையில் அமைந்தது.
இந்நிகழ்வின் மூலம், ஆறாம் ஆண்டு மாணவர்களில் மொத்தம் 68 மாணவர்கள் தங்கள் தொடக்கக் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்து, இடைநிலைப் பள்ளி கல்விக்குத் தயாராகியுள்ளனர்.
இந்த பட்டமளிப்பு விழா, மாணவர்களின் கல்விப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும், பள்ளியின் பெருமைக்குரிய சாதனையாகவும் திகழ்ந்தது.
அவர்கள் தொடர்ந்து கல்வியில் சிறப்பாக செயல்படுவதற்கு மேலும் உற்சாகத்தையும் தொடக்கப் பள்ளி வாழ்க்கையை மறக்க முடியாது சூழ்நிலையை உருவாக்கும் வகையில் இந்த விழா அமைந்தது.
ஆறாம் ஆண்டு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் சார்பில் முருகன் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் படைப்புகளும் நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.



