
சுங்கைப் பட்டாணி , டிச 16 – கடந்த ஆண்டு உரிமம் இல்லாமல் செயல்பட்டதற்காக இன்று சுங்கைப் பட்டாணியிலுள்ள ஒரு மின்னணு கழிவு மீட்பு நிறுவனத்திற்கு செஷன்ஸ் நீதிமன்றம் 18,000 ரிங்கிட் அபராதம் விதித்தது.
அடையாளம் வெளியிடப்படாத MZ Metals Retrieve Sdn Bhd இன் உரிமையாளர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நபிஷா இப்ராஹிம்
( Nabisha Ibrahim ) இந்த அபராதத்தை விதித்தார்.
மின் கழிவு மீட்பு என்பது மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்களை மீட்டெடுக்க நிராகரிக்கப்பட்ட மின் மற்றும் மின்னணு உபகரணங்களை சேகரித்தல், பிரித்தல் மற்றும் செயலாக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
சம்பந்தப்பட்ட நிறுவனம் சுற்றுச்சூழல் துறையின் உரிமம் இல்லாமல் கழிவு மீட்பு சேவையாக செயல்படுவது கண்டறியப்பட்டது, இது சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974 இன் பிரிவு 18(1) ஐ மீறியுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி கெடா துறையால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது புக்கிட் செலம்பாவ் தொழில்துறை பகுதியில் அந்த நிறுவனம் இந்த குற்றத்தை புரிந்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டது.



