
வாஷிங்டன், டிசம்பர் 17-அதிபர் டோனல்ட் ட்ரம்ப், அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான பயணத் தடைப் பட்டியலில் மேலும் சில நாடுகளை சேர்த்துள்ளார்.
இதில் சிரியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளும் அடங்கும்.
இப்புதிய முழுப் பயணத் தடை ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இதன் மூலம், முழுமையான அல்லது பாதிப் பயணத் தடைக்கு உட்பட்ட நாடுகளின் எண்ணிக்கை 39-தாக உயர்ந்துள்ளது.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக வெள்ளை மாளிக்கை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, சம்பந்தப்பட்ட நாடுகளில் பாதுகாப்பு சோதனை, தகவல் பகிர்வு மற்றும் பயணிகள் சரிபார்ப்பு முறைகள் போதுமானதாக இல்லை என்ற காரணம் முன்வைக்கப்பட்டுள்ளது.
சிரியா மற்றும் லாவோஸுடன் சேர்த்து, புர்கினா ஃபாசோ (Burkina Faso), மாலி, நைஜர், தென் சூடான் மற்றும் சியாரா லியோன் ஆகிய நாடுகளும் முழு பயணத் தடைக்கு
உட்படுத்தப்பட்டுள்ளன.
இந்நடவடிக்கைக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், எல்லை பாதுகாப்பை வலுப்படுத்த இது அவசியம் என அமெரிக்க அரசாங்கம் தற்காத்துள்ளது.



