
ஈப்போ, டிசம்பர் 22 – இன்று அதிகாலை பேராக் கம்பார், Kampung Masjid பகுதியில் அமைந்திருக்கும் Jalan Idris சாலையோரம் அமைந்திருந்த பழைய வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 54 கடைகள் முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளன.
சம்பவம் தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றவுடனேயே தீயணைப்பு வீரர்கள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு விரைந்துச் மீட்பு பணி வேளைகளில் உடனடியாக ஈடுபட்டனர் என்று பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயற்பாட்டு குழு உதவி இயக்குநர் Shazlean Mohd Hanafiah தெரிவித்தார்.
தீ விபத்தின் போது வணிக வளாகத்தில் இருந்த 54 பழைய கடைகளும் முழுமையாக எரிந்து நாசமடைந்ததாகவும், அவற்றில் 10 கடைகள் மட்டுமே செயல்பாட்டில் இருந்ததாகவும் அவர் கூறினார்.
இந்த தீ விபத்தில் முழு அளவிலான சேதம் ஏற்பட்டிருந்தாலும், எந்தவிதமான உயிரிழப்புகளும் அல்லது காயங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
25 தீயணைப்பு வீரர்களும், நான்கு தீயணைப்பு வாகனங்களும் ஈடுபட்ட இந்த மீட்பு நடவடிக்கைகள் மூலம், தீ குறிப்பிட்ட நேரத்திற்குள் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.



