
கோலாலம்பூர், டிச 23 – செப்பாங், Bandar Baru Salak Tinggiயில் திறந்த வாகன நிறுத்துமிடத்தில், பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் ஒருவர் தனது வாகனத்தில் இருந்தபோது கூர்மையான ஆயுதத்தால் வெட்டப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
60 வயதான அந்தப் பெண்ணை, அவருக்கு அறிமுகமான ஆடவர் ஒருவர் தாக்கியபின் தனது வாகனத்தில் தப்பியோடிவிட்டதாக செப்பாங் போலீஸ் தலைவர் நோர்ஹிசாம் பஹமான் ( Norhizam Bahman ) தெரிவித்தார்.
கொலை முயற்சி குற்றவியல் சட்டத்தின் 307 ஆவது பிரிவின் கீழ்
இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று இன்று வெளியிட்ட அறிக்கையல் நோர் ஹிசாம் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக சைபர்ஜெயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அந்த பெண்ணின் கழுத்து மற்றும் இடது கையில் வெட்டுக் காயங்கள் இருந்தன, கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுவதாக நோர் ஹிசாம் கூறினார்.



