
கோலாலம்பூர், டிச 23 -மரம் விழுந்ததைத் தொடர்ந்து நேற்று தடைப்பட்ட ETS மின்சார ரயில் சேவை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
பேராக்கில் Sungkai–Slim River ரயில் தண்டவான பாதையில் ரயில்கள் இன்று காலை 6.32 மணி முதல் ஒற்றை வழிதடத்தில் சேவையை தொடங்கின.
இருப்பினும், சில தாமதங்கள் இன்னும் வழித்தடத்தில் சேவைகளைப் பாதித்து வருவதாக (KTMB) எனப்படும் Malayan ரயில்வே பெர்ஹாட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட இடத்தில் மின்மயமாக்கல் அமைப்பின் பழுதுபார்க்கும் பணிகள் தற்போது KTMB இன் தொழில்நுட்பக் குழுவால் மேற்கொள்ளப்பட்டு வருவதால் , ரயில் செயல்பாடுகள் முழுமையாக பாதுகாப்பாக விரைவில் மீட்டெடுக்கப்படலாம்.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலான தாமதம் காரணமாக பயணத்தைத் தொடர விரும்பாத ETS பயணிகள், பயணத் தேதியிலிருந்து ஏழு நாட்களுக்குள் டிக்கெட் முகப்பிடங்களில் முழு கட்டணத்தையும் திரும்பப் பெற தகுதியுடையவர்கள்.
இது தற்போதுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
அதே நேரத்தில், ரயில் தாமதங்கள் நான்கு மணிநேரம் அல்லது அதற்கு மேல் நீடித்தால், பயணிகள் Premium Takaful திட்டத்தை வாங்கியிருந்தால், Etiqa claim உதவியை திரையில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் மூலமோ அல்லது support@goinsure.com.my என்ற மின்னஞ்சல் மூலமாகவோ கோரிக்கைகளை முன்வைக்கலாம்.



