
கோலாலம்பூர், டிசம்பர்-24 – கோலாலம்பூரில் உள்ள இலங்கை உயர் ஆணையம் #VisitSriLanka என்ற பெயரில் சிறப்பு மாலை தேநீர் விருந்தை நடத்தியது.
2026-ல் இலங்கை சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இலங்கை இடைக்கால உயர் ஆணையர் மி. எம்.ஐ. முகமது ரிஸ்வி (M.I. Mohamed Rizvi) தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இலங்கை சுற்றுலா துறையின் வலிமை, இயற்கை அழகு, பண்பாட்டு மரபுகள் மற்றும் அன்பான விருந்தோம்பலை அவர் சுட்டிக் காட்டினார்.
எனவே, மலேசியப் பயணிகளை வரவேற்க இலங்கை தயாராக இருப்பதாக வணக்கம் மலேசியாவிடம் அவர் சொன்னார்…
ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் மலேசிய மேலாளர், இரு நாடுகளுக்கிடையேயான வலுவான விமான இணைப்புகளை விளக்கினார்.
இலங்கை சுற்றுலா மேம்பாட்டு வாரியத் தலைவர் புத்திக ஹெவவாசம் (Buddika Hewawasam) இயங்கலை வாயிலாக உரையாற்றி, மலேசியச் சந்தையை நோக்கி புதிய திட்டங்களை அறிவித்தார்.
மலேசிய இந்திய சுற்றுலா சங்கத் தலைவர் டத்தோ அருள்தாஸ், இலங்கை சுற்றுலாவை ஊக்குவிக்க உறுதியளித்தார்.
மலேசிய சுற்றுலா துறை, ஊடகங்கள் மற்றும் விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி இலங்கை உணவு, கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்புகளை வளர்க்கும் அங்கம் ஆகிய அமர்வுகளுடன் நிறைவடைந்தது.



