குவாலா கெராயில் கோர விபத்து; 10 வயது சிறுவன் பலி

குவாலா கெராய், டிசம்பர் 26 – நேற்று, கிளந்தான் Kuala Krai பகுதிக்கு அருகாமையில் அமைந்திருக்கும் Bukit Pelampong, Jalan Kampung Chenis, Pahi-யில் மண் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று மோட்டார்சைக்கிளை மோதியதில் 10 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
மோட்டார் சைக்கிளில் பின்புறம் அமர்ந்திருந்த அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் மோட்டாரை ஓட்டி வந்த சிறுவனின் மாமாவிற்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன.
கோத்தா பாரு–குவா மூசாங் பிரதான சாலையிலிருந்து வந்துக்கொண்டிருந்த அந்த லாரியை எதிர்திசையிலிருந்து வந்த மோட்டார்சைக்கிள் அதன் வலப்பக்கத்தை மோதியதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
மரணமடைந்த சிறுவனின் உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் போலீசார் மேல் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல் தெரிந்தவர்கள் போலீசாரை உடனடியாக அணுக வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டனர்.



