
பெய்ஜிங், டிச 29 – சீன நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பேட்மிண்டன் விளையாடும் ரோபோ, தொடர்ச்சியாக 1,452 ஷாட்களை வெற்றிகரமாக திருப்பி அனுப்புவதன் மூலம் கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளது.
இந்த ரோபோவை Zhejiang Shenchen kaidong தொழிற்நுட்ப நிறுவனம் வடிவமைத்ததாக அறியப்படுகிறது.
Shaoxing , Zhejianng கில் இப்போட்டி நடந்தது, அதில் ரோபோ , சீனாவின் சிறந்த வீரர்கள் சிலரை எதிர்கொண்டது. இது ஒரு மொபைல் ரோபோவால் தொடர்ச்சியாக அதிக பேட்மிண்டன் ரிட்டர்ன்களுக்கான கின்னஸ் உலக சாதனையை படைத்தது.
இந்த தடகள ரோபோ பார்வை மற்றும் இயக்கக் கட்டுப்பாட்டை மில்லி விநாடி வரை ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த ரோபோவின் வெற்றிக்கு நாட்டின் சிறந்த மனித பேட்மிண்டன் வீரர்கள் சிலர் உதவினர்.



