Latestமலேசியா

தூண்களில் விரிசல்கள் கண்டுப்பிடிப்பு; சுங்கைய் ரம்பாய் பாலம் மூடப்பட்டது

தங்காக் , டிச 29 – ஜோகூரில் உள்ள Kesang மற்றும் தங்காக்கை ,மலாக்காவில் உள்ள சுங்கை ரம்பாயுடன் இணைக்கும் சுங்கை ரம்பாய் பாலத்தின் தூண்களில் விரிசல்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து , அப்பாலத்தில் அனைத்து வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜோகூர்-மலாக்கா எல்லையில் உள்ள 48 மீட்டர் நீளமுள்ள அப்பாலம் பயன்பாட்டிற்கு பாதுகாப்பற்றது என்று பொதுப்பணித் துறை தீர்மானித்ததை அடுத்து, இன்று முதல் மூடப்படுவதாக ஜோகூர் ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் பஸ்லி முகமட் சாலே ( Mohamad Fazli Mohamad Salleh ) கூறினார்.

பாலத்தின் தூண் அமைப்பு சேதமடைந்து பாதுகாப்பற்றதாக இருக்கலாம், வலுவான ஆற்று நீரோட்டங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று பொதுப்பணித்துறை கண்டறிந்தது. வாகன ஓட்டுநர்கள் மாற்றாக அலோர் காஜா – மலாக்கா தெங்கா தெங்கா-ஜாசின் நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!