
ஜோகூர் பாரு, டிசம்பர்-30 – ஜோகூர் – சிங்கப்பூர் இடையிலான இரண்டாவது ஜோகூர் பாலத்திலிருந்து கடலில் விழுந்த மலேசியரைத் SAR எனப்படும் தேடி மீட்கும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பல்வேறு அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்த 51 பேர் அவற்றில் களமிறக்கப்பட்டுள்ளதாக, இஸ்கண்டார் புத்ரி போலீஸ் துணைத் தலைவர் Azlan Abdul Kadir கூறினார்.
33 வயது ஆடவர் கடலில் விழுந்ததாக, நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மேல் சுல்தான் அபு பாக்கார் வளாக போலீஸ் நிலையத்திற்கு புகார் கிடைத்தது.
அன்றிரவே SAR பணிகள் தொடங்கிய நிலையில், படகுகள் வாயிலாக தேடல் தொடருகிறது.
தகவல் தெரிந்தோர் அருகிலுள்ள போலீஸ் நிலையங்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.



