
கோலாலம்பூர், ஜனவரி-2 – மலேசியாவில் முறைத்தவறிய 14 மத போதனைகள் இன்னும் செயலில் உள்ளதாக, தேசியப் போலீஸ் படையின் துணைத் தலைவர் தான் ஸ்ரீ ஆயோப் கான் மைடின் பிச்சய் தெரிவித்துள்ளார்.
1950 முதல் இதுவரை அத்தகைய 154 போதனைகள் அரசாங்கத்தால் தடைச் செய்யப்பட்டுள்ளன.
அதில் 114 போதனைகள் சிறப்பு பிரிவின் கண்காணிப்பில் உள்ளன.
இன்னமும் செயல்பாட்டில் உள்ள முறைத்தவறிய மத போதனைகளில் Perjalanan Mimpi Yang Terakhir, Millah Abraham, Nur Mutiara Mutmainnah, The Ahmadi Religion of Peace and Light உள்ளிட்டவையும் அடங்கும்.
இந்த போதனைகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கருதப்படுவதாக ஆயோப் கான் சொன்னார்.
இதுபோன்ற கும்பல்களின் நடவடிக்கை குறித்து பொது மக்கள், PDRM-மின் Volunteer Smartphone Patrol அல்லது VSP செயலி மூலம் தகவல் அளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.



