Latestமலேசியா

இரு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் இருவர் மரணம் 9 பேர் காயம்

பெத்தோங், ஜன 2- Sarawak Betongகில் ஜாலான் Lubok Antuவில் நான்கு சக்கர வாகனம் மற்றும் புரோட்டோன் Iriz கார் சம்பந்தட்ட விபத்தில் இருவர் இறந்ததோடு மேலும் ஒன்பது பேர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு நேற்று மாலை மணி 4.06 அளவில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சென்றடைந்த போதிலும் அதற்கு முன்னதாகவே விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் பொதுமக்களின் உதவியோடு மீட்கப்பட்டனர்.

எனினும் பெண் ஒருவர் புரோட்டோன் Iriz காரின் பின்புற இருக்கையில் சிக்கிக்கொண்டதால் சிறப்பு பாதுகாப்பு கருவியை பயன்படுத்தி அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டதாக தீயணைப்பு படையின் நடவடிக்கை அதிகாரி யூசோப் தாமின் ( Yusof Tamin ) தெரிவித்தார்.

விபத்து நிகழ்ந்த இடத்திலேயே ஒரு ஆடவரும் மற்றொரு பெண்ணும் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.

காயம் அடைந்த ஒன்பது பேர் மேல் நடவடிக்கைக்காக சுகாதார அமைச்சின் மருத்துவ பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். மற்றொரு நபர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!