
கோலாலம்பூர், ஜனவரி 2 – டிசம்பர் 31 ஆம் தேதியன்று, Prasarana Malaysia Bhd (Prasarana) நிறுவனத்தின் ரயில் மற்றும் பேருந்து சேவைகளை சுமார் 1.54 மில்லியன் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். இது Rapid KL மற்றும் Rapid Penang வரலாற்றிலேயே அதிகபட்ச எண்ணிக்கை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 0.76 விழுக்காடு அதிகம் என தெரிவிக்கப்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, கிள்ளான் பள்ளத்தாக்கில் பணியாற்றிய சுமார் 3,000 முன்நிலை ஊழியர்கள் கூட்டத்தை திறம்பட நிர்வகித்ததால் சேவைகள் சீராக நடந்ததாக அவர் மேலும் கூறினார்.
அந்த நாளில் 1.29 மில்லியன் பயணிகள் ரயில் சேவைகளையும், 251,737 பேர் பேருந்து சேவைகளையும் பயன்படுத்தினர். அதிக பயணிகள் இருந்தபோதும், காவல் துறையுடன் இணைந்த ஒருங்கிணைப்பு காரணமாக, போக்குவரத்து சேவைகள் பாதுகாப்பாகவும் திட்டமிட்டபடியும் செயல்பட்டதாக பிரசாரானா தெரிவித்தது.



