
கோலாலம்பூர், ஜன 2 – செராஸில் 15ஆவது மாடியிலுள்ள வாடகை அறையை உடைத்து உள்ளே புகுந்த இளைஞன் ஒருவன் அங்கு தூங்கிக் கொண்டிருந்த இளைம்பெண்ணை மானப்பங்கப்படுத்தியுள்ளான். நேற்று காலை மணி 8.50 அளவில் நடந்த இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட
21 வயது பெண் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானானதோடு இது குறித்து போலீசில் புகார் செய்தார். அப்பெண் தனது படுக்கையறைக்குள் சந்தேக நபரைக் கண்டு அதிர்ச்சியடைந்து, கூச்சல் போட்டதைத் தொடர்ந்து ,தாம் தவறான அறைக்குள் நுழைந்ததாக அந்த இளைஞன் கூறியிருக்கிறான்.
இதனிடைய இச்சம்பவத்தை கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ பாடில் மார்சுஸ் ( Fadil Marsus ) உறுதிப்படுத்தியதோடு 24 வயதுடைய சந்தேக நபர் அவனது நண்பனின் வீட்டில் கைது செய்யப்பட்டதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். விசாரணைக்கு உதவுவதற்காக அந்த இளைஞன் இன்று முதல் ஜனவரி 5ஆம்தேதிவரை தடுத்து வைக்கப்பட்டுள்ளான் .



