மலேசியா
திரங்கானுவில் கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்ட 4 வயது சிறுவன்

குவாலா நெரூஸ், ஜனவரி-10,
திரங்கானு, குவாலா நெரூஸ், Pantai Sauh கடலில் 4 வயது சிறுவன் நேற்று மாலை கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போனான்.
உறவினர்களுடன் கடற்கரைக்கு சென்ற சிறுவன், வீட்டுக்குக் கிளம்பும் போது கரையில் கால்களைக் கழுவிக் கொண்டிருந்தான்.
அப்போது திடீரென பெரிய அலை வந்து அவனை கடலுக்குள் இழுத்துச் சென்றது.
அங்கிருந்த பொது மக்கள் அவனை மீட்க முயன்றும், பலமான அலை காரணமாக அது முடியாமல் போனது.
நெகிரி செம்பிலானைச் சேர்ந்த அச்சிறுவன் சுமார் 200 மீட்டர் தூரம் கடலில் இழுத்துச் செல்லப்பட்டு, பின்னர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
தற்போது வரை அவன் கண்டுபிடிக்கப்படவில்லை.
போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து தீவிரமாக தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



