
சிலாங்கூர், ஜனவரி -12-சிலாங்கூர் மாநில அரசின் பொங்கல் விழா தனிச் சிறப்பு வாய்ந்தது என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராய்டு தெரிவித்தார். இவ்வாண்டு பொங்கல் விழா உலுலங்காட் மாவட்டத்தில் நடைபெறவுள்ளதாகவும் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களால் வழங்கப்பட்ட கூடுதல் நிதி ஒதுக்கீட்டின் வழி இம்முறை பொங்கல் விழா மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
காலை முதல் மாலை வரை இரண்டு அங்கங்களாக நடைபெறவிருக்கும் இவ்விழாவில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் சிறப்பு பிரமுகராக கலந்து கொள்ளவிருக்கிறார். மேலும் மாநில அரசின் தலைவர்கள், சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமூகத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.
இவ்விழாவில் பொங்கல் வைக்கும் வைபவம், கயிறு இழுக்கும் போட்டி, மாதுவேடப் போட்டி, தோரணம் பின்னுதல் போன்ற பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெறவிருக்கிறது.
சுமார் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கபடுவதாகவும் இதில் நமது பாரம்பரிய உணவுகள் பறிமாறப்படும் என்று வீ.பாப்பா ராய்டு தெரிவித்தார்.
ஒற்றுமையை வலுப்படுத்தவும், நல்லிணக்கத்தை பேணவும் ஒரு பாலமாக பொங்கல் விழா அமைவதாகவும் இன வேறுபாடின்றி அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு பாப்பா ராய்டு கேட்டுக் கொண்டார்.



