
ஆயர் குரோ, ஜனவரி-14-மலாக்கா, ஆயர் குரோவில் உள்ள கார் நிறுத்துமிடமொன்றில் நின்றிருந்த காரில் ஓர் ஆடவர் மரணமடைந்த நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
துர்நாற்றம் வீசியதை அடுத்து, காரின் ஓட்டுநர் இருக்கையில் ஒருவர் அசைவில்லாமல் இருந்ததை கவனித்த பொது மக்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர்.
பிற்பகல் 1.48 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், சடலத்தை மீட்டனர்.
இறந்தவர் 34 வயது உள்ளூர் நபர் என அடையாளம் கூறப்பட்டது.
காரின் உள்ளே கிடைத்த சில பொருட்களை விசாரணைக்காக போலீஸ் எடுத்துக் கொண்டுள்ளது.
சம்பவ இடத்தில் குற்றச் செயல் அம்சங்கள் எதுவும் கண்டறியப்படாததால், இது திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக மலாக்கா தெங்கா போலீஸ் கூறியது.



