Latestசிங்கப்பூர்

சிங்கப்பூரில் ‘sugar daddy’ வேலைப் பார்த்த மலேசியருக்கு 12 ஆண்டு சிறை, 15 பிரம்படிகள்

சிங்கப்பூர், ஜனவரி-14-இணையத்தில் பணக்கார ‘sugar daddy’ போல காட்டிக் நடித்துக் கொண்டு பெண்களை ஏமாற்றியக் குற்றத்திற்காக, 38 வயதான மலேசியர் GN Rajwant Singh-கிற்கு சிங்கப்பூரில் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 15 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளது.

போலி அடையாளங்களை உருவாக்கி, பெண்களை பாலியல் செயல்களில் ஈடுபடச் செய்ததோடு, மிரட்டி பணமும் பறித்துள்ளதாக அவர் மீது 4 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

குறிப்பாக, Mike உள்பட 3 வெவ்வேறு போலிப் பெயர்களில் ஆள்மாறாட்டம் செய்து சிங்கப்பூர் பெண்களை நம்ப வைத்து, மலேசியாவுக்கு வரவழைத்து அவர்களை உடலுறவுக்குக் கட்டாயப்படுத்தியுள்ளார்.

2018 முதல் 2020 வரை, வேலையில்லாமால் மனைவி மற்றும் பிள்ளைகளோடு மலேசியாவில் இருந்த போது அக்குற்றங்களைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இவரால், 3 பெண்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்; மேலும் 13 பேரைச் சார்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!