Latestமலேசியா

நிறுத்திவைக்கப்பட்டிருந்த சவ வண்டியை திருடியதற்காக முன்னாள் தொண்டூழியர் கைது

கோலாலம்பூர், ஜன 16 – நிறுத்திவைக்கப்பட்டிருந்த சவ வண்டியை திருடியதாக கூறப்படும் சமூக நல இயக்கத்தின் முன்னாள் தொண்டூழியர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சவ வண்டி காணாமல்போனதைத் தொடர்ந்து நேற்று மாலை மூன்று மணியளவில் அந்த வாகனம் கண்டுப்பிடிக்கப்பட்டதாக
Sentuhan Setia Kasih இயக்கத்தின் தோற்றுவிப்பாளர் Shahrol Muhammad தெரிவித்தார்.

அச்சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக அந்த முன்னாள் தொண்டூழியர் மற்றொரு நபருடன் இயக்கத்தின் அலுவலகத்திற்கு வருகை புரிந்ததாகவும் அவர் கூறினார்.

ஒரு மணி நேரத்திற்கு பின்னர்தான் அந்த வேன் காணாமல்போனதை தாம் உணர்ந்ததாகவும், அதோடு 100 ரிங்கிட்டிற்கும் குறைவான சமூக நல நிதியும் காணாவில்லை என்பதையும் தாம் உணர்ந்ததாக அவர் தெரிவித்தார்.

மனநல பாதிப்பை எதிர்நோக்கியிருந்ததாக நம்பப்படும் அந்த முன்னாள் தொண்டூழியர் அந்த இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டதாகவும் Shahrol கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!