Latestமலேசியா

ஜெடாவில் காணாமல் போன மலாய் நடிகை நடியா கெசுமா

ஜெடா, ஜனவரி-17 – மலாய் நடிகை நடியா கெசுமா சவூதி அரேபியாவின் ஜெடா சென்றடைந்த கையோடு காணாமல் போன தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புனித யாத்திரைக்காக அவர் உம்ரா மற்றும் சுற்றுலா குழுவுடன் பயணம் செய்தார்.

இந்நிலையில், மன்னர் அப்துல் அசிஸ் அனைத்துலக விமான நிலையம் சென்றுசேர்ந்ததும், ‘பாதுகாப்பாக வந்துவிட்டேன்’ என கணவருக்கு நடியா செய்தி அனுப்பினார்.

ஆனால் லண்டன் செல்ல வேண்டிய அடுத்த விமானத்தில் அவர் ஏறவில்லை.

பயண நிறுவனம், அவருக்கு பயணச் சீட்டு வழங்கப்பட்டதை உறுதிச் செய்துள்ளது.

ஆனால் அவர் check-in செய்யவில்லை.

விமான நிலையத்தில் 3 முறை அறிவிப்பு செய்யப்பட்டும், அவர் தோன்றவில்லை.

‘அந்நியரை சந்தித்தேன்’ என நடியா செய்தி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

அதன் பிறகு அவரிடமிருந்து ஒரு பதிலும் இல்லை.

இதனிடையே, நடியா விமான நிலையத்திலிருந்து வெளியேறியுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக, அவரின் கணவரும் USM விரிவுரையாளருமான Dr Muhammad Kamarul Kabilan Abdullah கூறியுள்ளார்.

ஆனால் அவரது கைப்பேசியோ உள்ளேதான் இருந்தது.

“நடியா தனது கைப்பேசியை ஒருபோதும் விட்டுவிடமாட்டார். தனது மதிப்புமிக்க பொருட்களை மிகவும் கவனமாக வைத்திருப்பவர். இது எந்த விதத்திலும் பொருத்தமாக இல்லை” என அவர் கூறினார்.

நடியாவின், பதிவுச் செய்யப்பட்ட 2 பயணப் பெட்டிகளும் அவருடன் இல்லை. விமான நிலைய பதிவுகள் படி, அவை baggage பகுதியிலிருந்து எடுக்கப்படவில்லை என்ற தகவலும் மர்மத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

மனைவிக்கு என்ன ஆனது எனத் தெரியாமல் குழந்தைகளுடன் கடக்கும் ஒவ்வொரு நிமிடமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது; என்றாலும் நம்பிக்கையுடன் காத்திருப்பதாக Kabilan Abdullah கூறினார்.

குடும்பத்தாரோடு நடியாவின் இரசிகர்களும் கவலையுடன் காத்திருக்கின்றனர்.

ஜெடா மற்றும் மலேசிய அதிகாரிகள் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!