
சென்னை, ஜனவரி-18-மாட்டுப் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு திருவிழா கோலாகலமாக அதே சமயம் பாதுகாப்பாக நடைபெற்றது.
புதுக்கோட்டை தச்சங்குறிச்சி தொடங்கி, மதுரை மாவட்டத்தின் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் களைக் கட்டிய ஜல்லிக்கட்டு, தமிழர்களின் வீரத்தையும் பாரம்பரியத்தையும் உலகுக்கு பறைசாற்றியது.
750 முதல் 1,200 காளைகளை அடக்க 450-க்கும் மேற்பட்ட காளையர்கள் களத்தில் இறங்கினர்.
வாடிவாசல் திறந்தவுடன் சீறிப் பாய்ந்த காளைகளின் ஆட்டத்தை, மக்கள் ஆரவாரத்துடன் கண்டு இரசித்தனர்.
வெற்றிப் பெற்ற காளையர்களுக்கு கார், டிரக் லாரி, தங்கம் உள்ளிட்ட கவர்ச்சிகரமான பரிசுகள் வழங்கப்பட்டன.
மாடுபிடி வீரர்களின் பாதுகாப்பு, அவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் என தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது.
பாரம்பரியமும் வீரமும் கலந்த இந்த ஜல்லிக்கட்டு, தமிழர் பண்பாட்டின் பெருமையை இந்த பொங்கல் திருவிழாவில் மீண்டும் உலகுக்கு எடுத்துக் காட்டியது.



